Print this page

பெண் பொலிஸாரிடம் பாலியல் சில்மிஷம் – சந்தேகநபர் நையப்புடைப்பு

பணியை முடித்துக் கொண்டு படைமுகாமிற்குச் சென்று கொண்டிருந்த புறக்கோட்டை காவல்துறையைச் சேர்ந்த இரு பெண் காவல்துறை அதிகாரிளிடம் பாலியல் சில்மிஷம் செய்ய முயன்ற நபர் ஒருவரை சுற்றியிருந்தவர்கள் மிகுந்த பிரயத்தனத்துடன் பிடித்துள்ளனர்.

இரண்டு பொலிஸ் பெண்கள் மற்றும் குழுவினர் சந்தேகரை பொலிஸாரிடம் ஒப்படைத்த் அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

53 வயதுடைய நபர், நேற்று இரவு 7 மணியளவில், சீருடை அணிந்திருந்த இரு பொலிஸாரையும் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக, புறக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.