Print this page

மட்டக்களப்பு சர்வதேச கிரிக்கட் மைதான காணி குறித்து ஆளுநர் திருப்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைப்பதற்கு கோரப்பட்ட காணியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். 

இந்த காணி சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு ஏற்ற காணி என ஆளுநர் திருப்தி வெளியிட்டார். 

மேலும் மைதானத்தை அண்மித்து பொழுது போக்கு மையம் அமைக்கும் திட்டம் உள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.