Print this page

ரணிலின் அழைப்பை ஏற்றது சஜித் அணி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று நாளை (26) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் சமகி ஜன பலவேகய இணைந்து கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த சர்வகட்சி மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் முன்வைக்கப்படவில்லை என கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பை மதித்து சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு அதன் முன்மொழிவுகள் குறித்து ஆராய்வதாகவும், சமகி ஜன பலவேகவாக பதிலளிப்பதாகவும் அவர் கூறினார்.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் தானும் பங்கேற்கவுள்ளதாக கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.