Print this page

விபத்தில் 16 வயது பாடசாலை மாணவர்கள் இருவர் பலி

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தம்பகல்ல ஏரிக்கு அருகில் இரண்டு பாடசாலை மாணவர்கள்  பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பே, தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தருஷ சந்தீப மற்றும் ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த சஸ்மித எஷான் ரணவீர என்ற இரு பாடசாலை மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த இரண்டு மாணவர்களும் 16 வயதுடையவர்கள்.