Print this page

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா சற்று முன்னர் இலங்கை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார்.