Print this page

ஹரீன் - மனுஷவிற்கு எதிரான தடை நீக்கம்

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த கட்சித் தடையை ஐக்கிய தேசியக் கட்சி நீக்கியுள்ளது.

அதன்படி அவர்களை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இணைத்துக் கொள்வதற்கு இன்று (02) சிறிகொத்த கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.