Print this page

இளம் பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட பிக்கு

இளம் பெண் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு அவரது நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய துறவி ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

காலி பிரதேசத்தில் வசிக்கும் 18 வயது யுவதியின் நிர்வாண படங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் களுத்துறை பயாகல மலேகொட விகாரை ஒன்றில் வசிக்கும் 26 வயதான  தேரருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அவருக்கு 6 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த சிறுமி இரகசிய பொலிஸில் முறைப்பாடு செய்து, சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த பிக்கு அடையாளம் காணப்பட்டதாகவும், தன்னை துறவி போன்று பாவனை செய்து அணுகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.