Print this page

நாடாளுமன்ற தெரிவுக்குழு யோசனை இன்று முன்வைப்பு

 

கடந்த மாதம்21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவினை அமைக்கும் யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

அத்துடன், நாளை தினம் குறித்த தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தெரிவுக்குழுவில் 15 பேர் நியமிக்கப்படவுள்ளதாக எமது நடாளுமன்ற செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த தெரிவுக்குழுவின் தலைவராக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.