Print this page

இலங்கையை எரித்தது அனுமன் அல்ல ராவணனின் ஆணவம் – ராகுல் காந்தி

மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுகையில், பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசியதுடன் “ராவணனின் ஆணவம் இலங்கையை எரித்தது போல மோடியின் ஆணவம் இந்தியாவை எரிக்கிறது” என்று கூறினார்.

ராவணனை ராமர் கொல்லவில்லை, ஆனால் அவரது (ராவணனின்) ஆணவமே அவரைக் கொன்றது, அதே போல் பிரதமர் நரேந்திர மோடியின் ஆணவம் நாட்டையே எரித்துக்கொண்டிருக்கிறது என்றார்.

இலங்கையை எரித்தது பகவான் அனுமன் அல்ல என்றும், ராவணனின் ஆணவமே இலங்கையை அழித்தது என்றும் ராகுல் காந்தி கூறினார்.