Print this page

அரச ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாய் வழங்கும்
சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திறைச்சேரியின் அனுமதியுடன் அரச நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சால்
அமைச்சுக்களில் செயலாளர்கள், குறித்த சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு
குறிப்பிட்டுள்ளது.

மாகாண தலைமை செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு மேற்படி
சுற்றுநிரூபம் அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் குறித்த கொடுப்பனவினை வழங்குவதற்கு வரவு - செலவுத்
திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.