Print this page

13 குறித்து எம்பிக்களை தெளிவுபடுத்த அதிஷ்டான பூஜை

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதால் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரரால் நடத்தப்படும் அதிஷ்டான பூஜை இன்று பிற்பகல் பபிலியான சுனேத்ராதேவி பிரிவெனயில் நடைபெறவுள்ளது.

நிர்ணய பூஜை இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

இதற்காக தேசிய அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இணைய உள்ளனர்.