Print this page

கொழும்பு நகரில் பஸ் விபத்து, 7 பேர் வைத்தியசாலையில்

பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று லொறியுடன் மோதி வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து விளக்குகளை மீறி குறித்த பஸ் வண்டியை செலுத்தியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.