Print this page

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியில் மாற்றம்

இந்தியாவின் அடுத்த இலங்கை உயர்ஸ்தானிகராக க்ஷேனுகா செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைவதன் மூலம் அவர் பதவியேற்பார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

தற்போது, க்ஷேனுகா திரேனி செனவிரத்ன ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக (வெளிநாட்டு ஊடகம்) பணியாற்றி வருகிறார்.

செனவிரத்ன முன்னர் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகராகவும் பின்னர் தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றினார்.