Print this page

13ஆம் திருத்தம் தொடர்பான தேசிய காங்கிரஸின் முன்மொழிவு ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம் தொடர்பான தேசிய காங்கிரஸின் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை அதன் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

நேற்று (15) மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இவ்வறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, பொருளாளர் ஜே.எம். வஸீர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்றே தேசிய காங்கிரஸ் தனது முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கிறது.

இம்முன்மொழிவுகள் பற்றி விரைவில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்று கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிந்திருக்க வேண்டும் எனவும்இ பொதுவாக மாகாண சபை முறைமை அவசியமற்றது எனவும, அது இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் அதாஉல்லா கடந்த காலங்களில் வலியுறுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Wednesday, 16 August 2023 07:22