Print this page

அனைத்து வாகனங்களுக்கும் மத்திய மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம்

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் மத்திய மாகாணத்தில் இருந்து வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் பரமி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வேறு மாகாணத்தில் உள்ள முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கான வருமான உரிமத்தை மத்திய மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த புதிய கணனி பயன்பாட்டின் மூலம் முழு இலங்கையின் வருமான உரிமங்களும் மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட உள்ளன.