Print this page

கட்சியில் இருந்து ஒரங்கட்டப்படும் தயாசிறி..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் தொகுதியான பண்டுவஸ்நுவரவில் ஏற்பாடு செய்யப்பட்ட 72வது கட்சி மாநாட்டை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் செப்டம்பர் 2ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் புரவலரும், முன்னாள் தலைவருமான சந்திரிகா குமாரதுங்கவை இதற்காக அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கட்சியின் உயர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வடமேற்கு மாகாணத்தில் உள்ள கட்சியின் பிரபல பதவி வடமத்திய மாகாணத்துக்கு வழங்கப்பட உள்ளதாக அறியமுடிகிறது.