Print this page

அரிசி விலை உயரும் என எச்சரிக்கை

அரிசி கையிருப்பை மறைத்து அரிசி விலையை உயர்த்த பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

இந்தியா அரிசி ஏற்றுமதியை நிறுத்தியமை, நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை மற்றும் இளவேனிற்காலத்தில் நெல் அறுவடையை ஓரளவு குறைத்தமை போன்றவற்றுடன் தொடர்புடைய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் வேளாண் துறையினர், பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களிடம், தங்களிடம் உள்ள இருப்புகள் குறித்து விசாரித்தும், அந்த இருப்புக்கள் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என, தெரியவந்துள்ளது.

வறண்ட காலநிலை தீவிரமடையும் என்ற அச்சத்தினால் விவசாயிகள் கையிருப்பை விற்பனை செய்யாமல் வீடுகளிலேயே சேமித்து வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் அரிசி சந்தைப்படுத்தல் சபையிடம் சுமார் 02 இலட்சம் கிலோ அரிசி உள்ள போதிலும், அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான அரிசி இருப்பு உள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச அமரசிங்க கூறுகிறார்.