Print this page

வீதி பலகைகளில் பயன்படுத்தும் மொழிகளுக்கு வரையறை

நாட்டில் உள்ள அனைத்து வீதிகள் மற்றும் குறுக்குவீதிகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் காட்சிப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் வஜிர அபேகுணவர்தனவுக்கு இந்த அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கையில் வீதிகளை பெயரிடும்போது, வேறு மொழிகளை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.