Print this page

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு எதிராக பின்வரிசை எம்பிக்கள் போர்க்கொடி!

மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்காத அமைச்சர்களை தோற்கடிப்போம் என ஆளும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தெரிவித்துள்ளனர்.

சில அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகள் தம்மை புறக்கணிப்பதாக அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளதாகவும், அதில் தானும் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போது காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள் தம்மை கவனிக்காததால் மக்கள் முன்னிலையில் அவமானப்பட நேரிடும் என்றும் இளம் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.