Print this page

மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை

மன்னார் முள்ளிகண்டல் பகுதியில் இன்று (24) காலை இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 55 மற்றும் 47 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இது வாகன விபத்து அல்ல துப்பாக்கிச்சூடு என தெரியவந்துள்ளது.

வெறிச்சோடிய இடத்தில் இந்த சம்பவம் நடந்ததால், துப்பாக்கிச்சூடு எப்படி நடந்தது என்பது இதுவரை வெளியாகவில்லை.