Print this page

முக்கிய அரசியல் புள்ளிகள் இரவில் சந்தித்து பேச்சு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரான முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

இது கொழும்பு 07, ரோஸ்மிட் பிளேஸில் உள்ள ஜப்பானிய உணவகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

இரவு உணவு உண்ணும் போது இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.