Print this page

இரண்டாக பிளவுபடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் பெற்றுக்கொள்ளும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவிகளைப் பெறுவதற்கு அக்குழுவினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆசியும் கிடைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த கவலையினால் தயாசிறி ஜயசேகர மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கட்சியின் விவகாரங்களில் சற்று விரக்தியடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜயசேகரவின் ஆசனத்தில் நடைபெறவிருந்த கட்சி மாநாட்டும் அரசாங்கத்தை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நலன் கருதி கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.