Print this page

போலிச் சான்றிதல் மூலம் 12 வருடங்கள் உயர் பதவி வகித்த அதிகாரி சிக்கினார்

போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்த நபர் ஒருவர் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 12 வருடங்களாக உயர் பதவி வகித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக குறித்த நபர் பணியாற்றியவர் என கோப் குழு முன்னிலையில் தெரியவந்துள்ளது.

இவர் பல தடவைகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகவும், அக்காலப்பகுதியில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாகவும் கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

10 வருடங்களின் பின்னர் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கோப் குழு முன்னிலையில் முதன்முறையாக அழைக்கப்பட்ட போதே இந்த உண்மைகள் வெளியாகியுள்ளமை விசேட அம்சமாகும்.