Print this page

இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

அடுத்த 03 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை நிலைநிறுத்தும் நோக்கில், அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம், முட்டைகளை இறக்குமதி செய்து உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்க முன்னதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதன்படி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவில் உள்ள 03 நிறுவனங்களிடமிருந்து விலைமனுக் கோரல் விடுக்கப்பட்டுள்ளது.

Last modified on Tuesday, 29 August 2023 09:06