Print this page

கொழும்புக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காலி சிறைச்சாலையில் இரு கைதிகளை கொன்ற மூளைக்காய்ச்சல் பாக்டீரியா தொற்றுக்குள்ளான நோயாளி கொழும்பு மாவட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோயாளி ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும் ரத்மலானை சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரசபையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவர் காய்ச்சல் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி ஜே. எம். குணதிலக்கவிடம் கேட்ட போது அவர் கூறினார்.

இந்த நபர் பணிபுரிந்த இடத்தில் இருந்த சுமார் 30 நண்பர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.