Print this page

தயாசிறியை பதவி நீக்க 100 லட்சம் ரூபா பந்தயம்

September 09, 2023

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படும் உறுப்பினர் ஒருவர் 50 இலட்சம் ரூபா பந்தயம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாகவும், அவருடன் பந்தயம் கட்டிய மற்றைய தரப்பினர் தோல்வியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு கட்சியின் பதவிக்காக எடுக்கப்பட்ட அதிகூடிய தொகையான பந்தயம் எனவும், செப்டம்பர் 5ஆம் திகதி தயாசிறி ஜயசேகர அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்வுகூறியதாகவும், குறித்த உறுப்பினர் இந்த பந்தயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வறையில் வைத்து  அறிவித்துள்ளார். 

தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு முந்தைய தினம் (செப்டம்பர் 4) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலும் 50 இலட்சம் பந்தயம் போடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையொன்றுக்கு வழங்கிய அரசியல் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். 

பந்தயத்தில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் கூறிய கணிப்பு உண்மையாகிவிட்டதாகவும், அதன்படி 100 இலட்சம் அவரிடம் இருப்பதாகவும் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.