Print this page

சுதந்திர கட்சி பதவிகள் அனைத்தும் ரணில் ஆதரவு அணிக்கு

September 11, 2023

தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் அமைச்சர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து முக்கிய பதவிகளையும் பகிர்ந்தளிக்கும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்மொழிவுகள் அடுத்த அரசியல் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கவும் இந்தக் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.