Print this page

வெளிநாடு செல்ல அனுமதி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாடு செல்வதற்கு விசேட மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்துள்ளது.

அத்துடன், வழக்கு விசாரணைகள் ஜூன் மாதம் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், நீதிமன்றம் அறிவித்துள்ளது.