Print this page

அத்தியாவசிய தேவையாக மாறும் ரயில் சேவை

September 12, 2023

இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தினசரி தொடரூந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள திடீர் வேலைநிறுத்தப் போராட்டங்களினால் இந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.