Print this page

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் நான் சஹ்ரானை கைது செய்யச் சொன்னேன் " - மைத்திரி

September 23, 2023

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் சஹ்ரானை கைது செய்யுமாறு தான் தெளிவான பணிப்புரையை விடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மூன்று சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது தன்னை இலக்கு வைத்து பாரதூரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி கூறினார்.