Print this page

அடுத்து ரணில் அதன் பிறகே நாமல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டுவதற்குத் தேவையான ஆதரவை வழங்கி 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு நாமல் ராஜபக்சவை தயார்படுத்துவது பொருத்தமானது என அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மேலும் 5 வருடங்களுக்கு ஜனாதிபதி பதவியில் நீடிக்க வேண்டும் என தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த உறுதிமொழிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடன்பாடும் தேவை எனவும், அதற்கமைய பிரேரணையை அவரிடமே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர்கள் குழுவும் யோசனை தெரிவித்துள்ளது.