Print this page

மலேசியாவில் மூன்று இலங்கையர் படுகொலை

மலேசியாவில் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களையும் அக்டோபர் 06 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவில் வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன. கொலைச் சம்பவம் தொடர்பாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட மூவரில் தம்பதியரின் மகனும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையாத நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மேலும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.