Print this page

மின் கட்டணம் குறித்து மஹிந்த எடுத்துள்ள தீர்மானம்

 

மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை சம்புத்தலோக மகா விகாரையை வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மகா சங்கத்தினரை சந்தித்தார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.