Print this page

மனிதர்களை நடைபிணமாக்கும் கடும் அபாய போதைப் பொருள் இலங்கையில்

மனிதர்களை நடைபிணங்களாக மாற்றும் 'ஸோம்பி போதைப்பொருள்' இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவை ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் டாக்டர் விராஜ் பெரேரா கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'ஜோம்பி  போதைப்பொருள்' என்பது விலங்குகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப் பயன்படும் மருந்துகள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் ஒருவரே காட்டப்பட்டிருந்தாலும், அது சமூகத்தில் எவ்வளவு பரவலாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை ஆள்பவர்களும், சட்டத்தை நிலைநாட்டுபவர்களும் போதைப்பொருளில் இலாபம் அடைவதால் போதைப்பொருள் ஒழிப்பில் உரிய தீர்வைக் கொண்டுவருவதில் அக்கறை காட்டுவதில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.