Print this page

நாடு மிகவும் பெருமைப்படுவதாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் வாழ்த்து

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், சர்வதேச மட்டத்தில் இலங்கை சார்பாக அடைந்துள்ள தனித்துவமான சாதனையையிட்டு நாடு மிகவும் பெருமைப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அவரது எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி தனது ஆசிகளையும் தெரிவித்துள்ளதாகவும், அவர் நாட்டிற்கு வந்த பின்னர் அவரை சந்திப்பார் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.