Print this page

கொள்ளுபிட்டியால் பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்து 17 பேர் வைத்தியசாலையில்

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.

இந்த விபத்து இன்று (06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், குறித்த பேரூந்து கொழும்பு-தெனியாய பேருந்து ஆகும்.

விபத்து காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.