Print this page

மாத்தறைக்கு 600 இராணுவத்தினர் அழைப்பு, பாடசாலைகளுக்குப் பூட்டு

மாத்தறை மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக சுமார் 600 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.