Print this page

திருமணமாகாத 18 வயது யுவதி பெற்றெடுத்த சிசுவிற்கு நேர்ந்த கதி!

திருமணமாகாத பெண்ணொருவர் தனது வீட்டில் பிரசவித்த குழந்தையை குளியல் தொட்டியில் போட்டதை அடுத்து அக்குழந்தை உயிரிழந்துள்ளது.

18 வயதுடைய இந்த சிறுமி பிரசவத்தின் பின்னர் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி காலி உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர்கள் பரிசோதித்ததில், அவருக்கு குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது.

அதன்படி, அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, குழந்தை குளியல் தொட்டியில் வைக்கப்பட்டிருப்பதும், குழந்தை ஏற்கனவே இறந்து கிடந்ததும் தெரியவந்தது.