Print this page

ஐந்து நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா

ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வரும் வெளிநாட்டவர்களுக்கு அடுத்த மூன்று வருடங்களுக்கு இலவச சுற்றுலா வீசா வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் அமைச்சரவையில் இதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வாய்ப்புகள் வழங்கப்படும்.