Print this page

ஜனாதிபதி சீனா சென்று வந்ததும் அமைச்சரவையில் மாற்றம்

சுற்றாடல் அமைச்சரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன விஜயத்தின் பின்னர் தீர்மானிக்கவுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமதுவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டு, சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி வெற்றிடமானது.

அரசியலமைப்பின் விதிகளின்படி, வெற்றிடமாக உள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியின் பொறுப்பு தற்போது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதுடன், அவர் நாடு திரும்பிய பின்னர் சுற்றாடல் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.