Print this page

நாளை இடம்பெறும் புலமை பரிசில் பரீட்சை குறித்த அறிவிப்பு

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவசர நிலை ஏற்படும் எந்த இடத்திலும் இருக்கும் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் குறிப்பிட்டார்.