Print this page

எரிபொருள் சேமிக்குமாறு ஜனாதிபதி அறிவுரை

முடிந்தவரை எரிபொருளை சேமித்து இருப்பில்  வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் நிலவும் மோதல் மற்றும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் மோதல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் வாய்ப்பு உள்ளதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து கிடங்குகளிலும் போதிய எரிபொருளை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.