Print this page

பயங்கரவாத சந்தேக நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வங்கி கணக்குகள், குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ள சந்தேகநபர்களுடையவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக கூறியுள்ளார்.

குறித்த வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிலிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.