Print this page

34 எதிர் மனுக்கள் நீதிமன்றில் தாக்கல் - சபாநாயகர் அறிவிப்பு

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான வரைவு சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 34 மனுக்களின் பிரதிகள் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 121(1) இன் பிரகாரம் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி அறிவிப்புகளை வெளியிடும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.