Print this page

டயானா கமகேவின் தலைவிதி 31ம் திகதி தீர்மானிக்கப்படும்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை அறிவிப்பதை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என சமூக ஆர்வலர் ஓஷால ஹேரத் உரிய மனுவை சமர்ப்பித்திருந்தார்.