Print this page

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அவசர ஆளும் கட்சி குழுக் கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் ஆளும் கட்சி எம்பிக்களின் விசேட குழு கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், குழுக் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படவுள்ளது.

அதுமட்டுமல்லாமல் புதிய பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கேட்க உள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

Last modified on Wednesday, 18 October 2023 06:56