Print this page

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பல மண் சரிவுகள்

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் இன்று (ஒக்டோபர் 21)  மதியம் பல மண் சரிவுகள் பதிவாகியுள்ளன.

அதற்கமைய, தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பெரகலைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், மண் சரிவு காரணமாக அவசரமான சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை.