Print this page

லெபனான் கட்டிட இடிபாட்டில் இருந்து இலங்கை பெண் சடலமாக மீட்பு

லெபனானில் கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் மாத்தறை பகுதியைச் சேர்ந்த  பிரேமலதா என்ற 65 வயது மூதாட்டி என தெரியவந்துள்ளது.