Print this page

குடிகார சாரதிகளை பிடிக்கும் பொலிஸாருக்கு 5000 கொடுப்பனவு

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் முன்னோடித் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தயாராகி வருகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.