Print this page

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

 

இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருளுடன் ஒருகொடவத்தை பாலத்துக்கு அருகில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து இருந்து ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 வயதுடைய அங்கொட பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.